எம்புரான் படத்தின் 5 நாட்களுக்கான வசூல் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் மலையாள சினிமாவிலேயே புதிய வரலாறு படைத்தது. அதாவது குறுகிய நாட்களிலேயே ரூ. 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த இமாலய வெற்றிக்கு பிறகு பிரித்விராஜ், லூசிபர் 2 – எம்புரான் திரைப்படத்தை இயக்கியிருந்தார். முதல் பாகத்தில் நடித்திருந்த மோகன் லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் இணைந்து சுராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஆசிர்வாத் சினிமாஸ், லைக்கா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியிருந்த இந்த படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வந்தது. பான் இந்திய அளவில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இப்படம் முதல் இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தனர். அதைத்தொடர்ந்து இந்த படத்திற்கு எதிராக சர்ச்சைகளும் கிளம்பின.
அதாவது இப்படத்தில் குஜராத் மத கலவரத்தை போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தால் வலதுசாரிகள் இப்படத்தினை கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும் இப்படம் முதல் 5 நாட்களுக்குள் ரூ. 200 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.