Homeசெய்திகள்சினிமாமலையாள சினிமாவின் புதிய மைல்கல்..... எகிறி அடித்த 'எம்புரான்'!

மலையாள சினிமாவின் புதிய மைல்கல்….. எகிறி அடித்த ‘எம்புரான்’!

-

- Advertisement -

கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் லூசிபர் திரைப்படம் வெளியானது. மலையாள சினிமாவின் புதிய மைல்கல்..... எகிறி அடித்த 'எம்புரான்'!அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இதே கூட்டணியில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த உருவாகியுள்ள லூசிபர் 2 – எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வந்தது. மலையாள சினிமாவிலேயே லூசிபர் திரைப்படம் தான் குறுகிய நாட்களில் அதிக வசூலை வாரி குவித்தது. அதேபோல் எம்புரான் திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 100 கோடி அதிகமாக வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மலையாள சினிமாவின் புதிய மைல்கல்..... எகிறி அடித்த 'எம்புரான்'!இந்த படம் பான் இந்திய அளவில் வெளியாகி இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. லூசிபர் திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக இருந்தது. ஆனால் எம்புரான் திரைப்படத்தின் திரைக்கதை வலுவாக இல்லாததால் இது ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும் இனிவரும் நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ