எம்புரான் பட ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணியில் வெளியான லூசிபர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. எனவே இதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து படமானது வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது பிரித்விராஜுக்கு இந்த படத்தில் ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் இருக்கும் போல் தெரிகிறது. அதேசமயம் சுராஜ் வெஞ்சரமூடுவின் கதாபாத்திரமும் வலுவாக அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ள நிலையில் லூசிபர் படத்தை போல் இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ட்ரைலரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, “மோகன்லால், பிரித்விராஜின் எம்புரான் பட ட்ரெய்லரை பார்த்தேன். இந்த படம் அருமையான படைப்பு. படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
எம்புரான் படத்தினை சுபாஸ்கரன், கோகுலம் கோபாலன், ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். சுஜித் வாசுதேவ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க தீபக் தேவ் இதற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.