Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாகும் 'எம்புரான்' பட டிரைலர் .... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாளை வெளியாகும் ‘எம்புரான்’ பட டிரைலர் …. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

எம்புரான் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை வெளியாகும் 'எம்புரான்' பட டிரைலர் .... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மோகன்லால் நடிப்பில் தற்போது எம்புரான் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ளார். இந்த படமானது மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படத்தின் வெற்றி இரண்டாம் பாகமான எம்புரான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை (மார்ச் 20) மதியம் 1.08 மணி அளவில் வெளியாகும் என இப்படத்தின் இயக்குனர் பிரித்விராஜ் சுகுமாரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.நாளை வெளியாகும் 'எம்புரான்' பட டிரைலர் .... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லூசிபர் 2- எம்புரான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை லைக்கா நிறுவனமும் ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படத்தில் இருந்து லைக்கா நிறுவனம் விலகி இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்திருக்கும் நிலையில் சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ