Homeசெய்திகள்சினிமாநீண்ட இடைவெளிக்கு பிறகு ஆங்கில டைட்டில்..... மூன்று வேடங்களில் களமிறங்கும் அஜித்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆங்கில டைட்டில்….. மூன்று வேடங்களில் களமிறங்கும் அஜித்!

-

நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். மங்காத்தா படத்திற்குப் பிறகு இந்த படத்தில் அஜித்துடன் இணைந்த அர்ஜுன் மற்றும் திரிஷா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கப்பட்டு கிட்டத்தட்ட பத்து மாதங்களாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் 50% படப்பிடிப்பு மட்டுமே நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித், தனது 63 வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் இப்படம் உருவாக உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பின் மூலம் நடிகர் அஜித் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே அஜித் வரலாறு திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு குட் பேட் அக்லி படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. எனினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் வில்லன், ரெட், சிட்டிசன் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு 22 வருடங்கள் கழித்து அஜித்தின் படத்திற்கு ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ