Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் 'ட்ரெயின்' படத்தில் இணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை!

விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ படத்தில் இணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை!

-

- Advertisement -

விஜய் சேதுபதியின் 'ட்ரெயின்' படத்தில் இணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் வில்லனாகவும் பல படங்களில் கலக்கி வருகிறார். அந்த வகையில் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஷாருக்கான் உடன் இணைந்து இவர் நடித்திருந்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து தமிழில் மகாராஜா, VJS51 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ட்ரெயின் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது அதைத் தொடர்ந்து பூஜையும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து வெற்றிமாறன் நடிக்க உள்ளார் என்ற செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.விஜய் சேதுபதியின் 'ட்ரெயின்' படத்தில் இணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை!

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா இப்படத்தில் இணைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை கனிகா ஸ்டார், எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ