இயக்குனர் எம். ராஜேஷ், கூரன் படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குனர் எம். ராஜேஷ் தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கடைசியாக இவர், ரவி மோகன் நடிப்பில் பிரதர் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அடுத்தது இவர், அதர்வா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இவர், கூரன் படம் குறித்து பேசியுள்ளார்.
நாய் ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் கூரன். இந்த படத்தில் எஸ்.வி. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், பாலாஜி சக்திவேல், இந்திரஜா ரோபோ சங்கர், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை புதுமுக இயக்குனர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைக்க மார்ட்டின் தன்ராஜ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். விபி கம்பைன்ஸ் நிறுவனமும் கனா புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
Director Rajesh about the #Kooran Movie ..✌️ Film Releasing on Feb 28..🤙pic.twitter.com/vH6yHUcpqi
— Laxmi Kanth (@iammoviebuff007) February 24, 2025
அதன்படி வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி இந்த படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் எம். ராஜேஷ், “கூரன் திரைப்படம் நன்றாக இருக்கிறது. வித்தியாசமான கதை, வித்தியாசமான திரைக்கதை. அதுவும் இல்லாமல் எஸ்.வி. சந்திரசேகர் சார் நடித்திருக்கிறார். மாநாடு படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அது போலவே இந்த படத்திலும் பேசப்படும். இது ஒரு புதிய கான்செப்ட். திரையரங்குகளுக்கு சென்று இந்த படத்தை பாருங்கள். எல்லோருக்குமே இந்த படம் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.