பகத் பாசில், வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டிஜே ஞானவேல் இயக்குகிறார். இதில் ரஜினியுடன் இணைந்து பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினி இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ராணா இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் இதில் ரஜினிக்கு மகனாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி திருவனந்தபுரம், ஐதரபாத், மும்பை போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரஜினி தனது பகுதிகளை நிறைவு செய்தார். அதைத்தொடர்ந்து மற்ற நடிகர்களின் காம்பினேஷனில் மீதம் 18 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இதற்கிடையில் இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று பட குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் பகத் பாசில் வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.