ஃபேமிலி ஸ்டார் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ஏராளமான பெண் ரசிகர்களையும் திரட்டி வைத்துள்ளார் விஜய் தேவரகொண்டா. கடைசியாக இவர் குஷி படத்தில் நடித்திருந்தார். ஃபேமிலி என்டர்டெயினர் படமாக வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஃபேமிலி ஸ்டார் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சீதாராமம் பட புகழ் மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். KU மோகனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் டீசரும் அதைத் தொடர்ந்து பாடல்களும் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எனவே விஜய் தேவரகொண்டாவிற்கு இந்த படமும் வெற்றி படமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
My Family Star #kumohanan shot this fun film! 🤩
Wishing the entire team of #FamilyStar a blockbuster hit! 💥 💥♥️
Can’t wait to watch this one! ☺️ https://t.co/BFrT3QCFnz— Malavika Mohanan (@MalavikaM_) March 28, 2024
மேலும் மாஸ்டர் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், “பிளாக்பஸ்டர் ஹிட்டாக ஃபேமிலி ஸ்டார் படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தை பார்ப்போம் என்னால் காத்திருக்க முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.