தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் நிலையில் படமானது அக்டோபர் 31 அன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் இந்த படத்தில் இணைந்துள்ளார் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் தற்போது பல பிரபலங்கள் படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். SK23 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சிங்க நடை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இந்த படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.