Homeசெய்திகள்சினிமா'தக் லைஃப்' படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு விபத்து..... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு விபத்து….. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

-

இயக்குனர் மணிரத்னம் நாயகன் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.'தக் லைஃப்' படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு விபத்து..... அதிர்ச்சியில் ரசிகர்கள்! இதில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. 'தக் லைஃப்' படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு விபத்து..... அதிர்ச்சியில் ரசிகர்கள்!ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு ராஜஸ்தான், புதுடெல்லி, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் (செர்பியா) நடைபெற இருப்பதாகவும் அதற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 'தக் லைஃப்' படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு விபத்து..... அதிர்ச்சியில் ரசிகர்கள்!இந்நிலையில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது பிரபல நடிகர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படும் சமயத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதனால் ஜோஜு ஜார்ஜ் ஓய்விற்காக கொச்சின் திரும்பி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ஜோஜு ஜார்ஜ் விரைவில் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ