Homeசெய்திகள்சினிமாரஜினியின் மகளை குற்றம் சாட்டும் பிரபல நடிகர்!

ரஜினியின் மகளை குற்றம் சாட்டும் பிரபல நடிகர்!

-

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரின் கூட்டணியில் லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.ரஜினியின் மகளை குற்றம் சாட்டும் பிரபல நடிகர்! இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் வெளியான முதல் நாளிலிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் படத்திற்கு சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே லால் சலாம் படத்திற்கு சரியாக ப்ரமோஷன் செய்யவில்லை என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் மகளை குற்றம் சாட்டும் பிரபல நடிகர்!இந்நிலையில் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை குற்றம் சாட்டியுள்ளார். அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விஷ்ணு விஷாலிடம் வெறும் 45 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டிருந்தாராம். ஆனால் 90 நாட்கள் வரை படப்பிடிப்பை இழுத்து இதுபோன்ற கதையை கொடுத்திருக்கிறார் என்றும் தன் நேரத்தை வீணடித்து விட்டார் என்றும் வருத்தத்துடன்
குற்றம் சாட்டியுள்ளாராம்.

ரஜினியின் மகளை குற்றம் சாட்டும் பிரபல நடிகர்! இதனால் லால் சலாம் திரைப்படம் வெற்றி பெற்றிருந்தால் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை குறை கூற மாட்டார் என்று சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் அதர்வா நடிக்க இருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ