பிரபல நடிகர் கிச்சா சுதீப், சிறந்த நடிகருக்கான விருதை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்திலும் நானி நடிப்பில் வெளியான நான் ஈ திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடைசியாக மேக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆக்சன் கலந்த திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பல்வேறு தரப்பினரிடையே இந்த படம் பாராட்டுகளை பெற்றது. இதற்கிடையில் கி சுதீப், சேரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இதற்கிடையில் இவர் கன்னடத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.இந்நிலையில் தான் பயில்வான் என்ற படத்தில் நடித்ததற்காக கர்நாடக அரசு கிச்சா சுதீப்புக்கு சிறந்த நடிகருக்கான விருதினை அறிவித்துள்ளது. ஆனால் கிச்சா சுதீப், இந்த விருதை புறக்கணிப்பதாக தெரிவித்திருக்கிறார். அதாவது விருதுகள் பெறுவதை தான் நிறுத்தி விட்டதாகவும் கலைக்காக அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட வேறு யாருக்காவது இந்த விருதை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார் கிச்சா சுதீப். இந்த தகவல் கிச்சா சுதீப் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அவருடைய இந்த செயலுக்கு அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.