Homeசெய்திகள்சினிமாதக் லைஃப் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்..... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தக் லைஃப் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்….. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

தக் லைஃப் படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்..... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் கடந்த 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் கூட்டணி அமைத்துள்ளனர். அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். கமல்ஹாசனின் 234 வது படமான இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசை அமைக்க இருக்கிறார். மாஸான ஆக்சன் படமாக இப்படம் உருவாக இருக்கும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் மேலும் இரு பிரபலங்கள் இணைந்துள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் கௌதம் கார்த்திக், தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் – ம் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மல்டி ஸ்டாரர் படமாக தயாராக இருக்கும் தக் லைஃப் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மேன்மேலும் அதிகமாக வருகிறது.

MUST READ