அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதே சமயம் அஜித், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதே இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், ஸ்பெயின் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என செய்திகள் வெளியானது. அதே சமயம் சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பதாக தகவல் கசிந்தது. சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது மற்றுமொரு பிரபல நடிகர் இணைந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அந்த நடிகர் வேறு யாருமில்லை. நடிகை சினேகாவின் கணவர் பிரசன்னா தான்.
நடிகர் பிரசன்னா அஞ்சாதே, கண்ணும் கண்ணும், நாணயம், துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.