இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போதை தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருகிறார். இவர் மாநாடு, கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். கடைசியாக விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தை இயற்றியிருந்தார். இப்படம் கலையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது. இதைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் தலைவர் 171 படத்தை இயற்றியிருக்கிறார். லோகேஷ். இதற்கிடையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி பல படங்களை தயாரித்து வரும் லோகேஷ் தற்போது ஒரு நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதன்படி ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார் லோகேஷ். இந்த பாடலுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ள நிலையில் கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்தப் பாடல் காதல் பாடலாக உருவாகியுள்ள நிலையில் இதில் லோகேஷ் ரொமான்டிக்கான ரோலில் நடித்துள்ளார்.
Unga padathula romance panna thalayai vettittu.. what is this ma @Dir_Lokesh !? 💀💀 https://t.co/3VZOH4SEnk
— Gayathrie (@SGayathrie) March 21, 2024
நேற்று இந்த ஆல்பம் பாடலில் டீசர் வெளியாகி இருந்த நிலையில் இதை கண்ட பிரபல நடிகை காயத்ரி, “உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு, இது என்னம்மா லோகேஷ்” என்று லோகேஷ் கனகராஜை கலாய்த்துள்ளார்.
நடிகை காயத்ரி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.