விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக மகாராஜா திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதேசமயம் விஜய் சேதுபதி விடுதலை 2, ஏஸ் போன்ற படங்களையும் விண்ட் என்ற வெப் தொடரையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் விஜய் சேதுபதி மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டார்க் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து வினய் ராய், சம்பத் ராஜ், பப்லு ப்ரித்விராஜ், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு பாடலை இயக்குனர் மிஸ்கின் பாடி இருக்கிறார். மேலும் மற்றொரு பாடலை பாடுவதற்காக இயக்குனர் மிஸ்கின் நடிகை ஸ்ருதிஹாசனை அணுகியுள்ளதாகவும் ஸ்ருதிஹாசன் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் டப்பிங் பணிகளும் பின்னணி வேலைகளும் தொடங்கப்பட உள்ளன. எனவே படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ஸ்ருதிஹாசன் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ட்ரெயின் திரைப்படத்தில் பாடகியாக இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.