பிரபல நடிகை பிரணிதா ஆண் குழந்தைக்கு தயாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபல நடிகை பிரணிதா ஆரம்பத்தில் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருப்பினும் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படம் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வந்த பிரணிதா சூர்யாவுடன் இணைந்து மாசு என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக இவர் அதர்வா நடிப்பில் வெளியான ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில்தான் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்து கொண்டார். 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வந்த பிரணிதா தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாக சமீபத்தில் தனது இரண்டு வயதுடைய பெண் குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.