Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் ரிலீஸ் செய்யப்படாத 'அயலான்'..... காரணமான பிரபல பாலிவுட் நடிகர்!

தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படாத ‘அயலான்’….. காரணமான பிரபல பாலிவுட் நடிகர்!

-

- Advertisement -

தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படாத 'அயலான்'..... காரணமான பிரபல பாலிவுட் நடிகர்!சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட படம் அயலான். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் 14 வது படமாக உருவாகியிருந்த இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி 2024 ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். படத்தை, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நான்கு நாட்களில் உலக அளவில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற அயலான் படம் உலக அளவில் 75 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி தெலுங்கு மொழியில் அயலான் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தெலுங்கில் படம் ரிலீஸ் ஆகவில்லையாம். தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படாத 'அயலான்'..... காரணமான பிரபல பாலிவுட் நடிகர்!இதற்கு காரணம் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் அயலான் படத்தின் DI பணிகளை கவனித்து வந்ததால், இதற்குண்டான தொகையை கே ஜே ஆர் ராஜேஷ் அந்நிறுவனத்திற்கு வழங்க வில்லையாம். இதன் காரணமாக அயலான் படத்தின் தெலுங்கு ரிலீஸ் சமயத்தில், ரெட் சில்லிஸ் நிறுவனம் கன்டன்ட்டை தர மறுத்துள்ளது. இதன் விளைவாக அயலான் திரைப்படம் ஜனவரி 26 அன்று ரிலீஸ் செய்யப்படவில்லை. இதனால் சிவகார்த்திகேயனும் மற்ற
படக்குழுவினரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனராம்.

MUST READ