பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் கிளம்பி உள்ளது.
பத்து தல படத்தை முடித்துள்ள சிம்பு தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகயிருக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தீபிகா படுகோனே பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரை சென்று படங்களில் நடித்துள்ளார். அவருக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர் எனவே அவரது சம்பளம் சிம்புவின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில் அவரை தமிழ் சினிமாவிற்கு கொண்டுவர படக்குழுவினர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை படத்தின் அப்டேட் வரும் போது தெரிந்து கொள்ளலாம்.