Homeசெய்திகள்சினிமாவெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்த சன்னி லியோன்

வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்த சன்னி லியோன்

-

பாலிவுட்டில் தொடக்கத்தில் ஆபாச காட்சிகளில் நடித்து சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை சன்னி லியோன். இதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் நல்ல திரைக்கதை கொண்ட திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உருவெடுத்த அவர், 2014-ம் ஆண்டு ஜெய் நடித்த வடகறி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆகினார். பாலிவுட் நடிகையாக இருந்தாலும் அவருக்கு தமிழில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். வடகறி படத்திற்கு பிறகு மம்மூட்டி நடித்த மதுரராஜா மற்றும் ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இது தவிர இந்தி மற்றும் தமிழ் மொழியிலும் அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை சன்னி லியோன், அண்மையில் தொழில் அதிபராகவும் அவதாரம் எடுத்தார். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரில் அவர் புதிய உணவகம் ஒன்றை திறந்தார். எனவே, நடிப்பு, தொழில் மற்றும் குடும்பம் என மாறி மாறி தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருந்த சன்னி லியோன் சின்னத்திரைக்கு வருகை தருகிறார். தொலைக்காட்சியில் டேட்டிங் நிகழ்ச்சி ஒன்றில் சன்னி லியோன் தொகுப்பாளராக பணியாற்ற உள்ளாராம். சன்னி லியோன் தொகுத்து வழங்க உள்ள ஸ்ப்லிட்ஸ்வில்லா நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

MUST READ