Homeசெய்திகள்சினிமாஷாருக்கான் காலில் விழுந்த பிரபல இயக்குனர்!

ஷாருக்கான் காலில் விழுந்த பிரபல இயக்குனர்!

-

- Advertisement -

பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ஷாருக்கான், தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார். அதன்படி ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான், ஜவான் போன்ற படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து வெளியான டங்கி திரைப்படமும் நல்ல வசூலை பெற்று தந்தது.ஷாருக்கான் காலில் விழுந்த பிரபல இயக்குனர்!

இந்நிலையில் தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான இயக்குனர் அட்லீ, பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே புகழை உச்சத்தை தொட்டு பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றார். அதே சமயம் அட்லீ மீண்டும் ஷாருக்கான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஷாருக்கான் காலில் விழுந்த பிரபல இயக்குனர்!இதற்கிடையில்  ஜவான் திரைப்படம் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு விருதுகளை அள்ளி உள்ளது. இந்நிலையில் தான் 2024 ஆம் ஆண்டின் ஜீ சினிமா விருது வழங்கும் விழாவில் ஜவான் படத்தை இயக்கியதற்காக இயக்குனர் அட்லீ சிறந்த இயக்குனருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது மேடை ஏறுவதற்கு முன்பாக அங்கிருந்த ஷாருக்கான் காலில் விழுந்தார். ஷாருக்கான் காலில் விழுந்த பிரபல இயக்குனர்!உடனே ஷாருக்கான் அட்லீயை கட்டி அணைத்து அவரை வாழ்த்தினார். இது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ