நடிகர் விஜய் கடைசியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கியிருந்த நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய், தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் படத்தினை இயக்கி வருகிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், நரேன், பிரியாமணி, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படமானது அரசியல் கதைகளத்தில் உருவாவதாகவும் படத்தில் நடிகர் விஜய் எக்ஸ் போலீஸ் ஆபீஸராகவும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய், படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க மறுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கடந்த 1992 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தான் விஜய் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். அதற்கு முன்பாக விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், விஜயை சினிமாவில் அறிமுகப்படுத்த பல இயக்குனர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினாராம். அப்போது எஸ் ஏ சந்திரசேகர், இயக்குனர் பி வாசுவை அணுகியதாகவும் ஒரு சில காரணங்களால் பி. வாசு விஜயை இயக்க மறுத்ததாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.