பிரபல இயக்குனர் விஷ்ணு வரதன் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான குறும்பு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து அறிந்தும் அறியாமலும் போன்ற பல வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார். அதே சமயம் இவர் அஜித் நடிப்பில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களையும் இயக்கி வெற்றி கண்டார். தற்போது இவர் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி மற்றும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஆகியோரின் நடிப்பில் நேசிப்பாயா எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் விஷ்ணு வரதன் மீண்டும் அஜித்தை இயக்க விரும்புவதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது, இரண்டு முதல் மூன்று முறை அஜித்தை இயக்கும் வாய்ப்பை இழந்ததாகவும் சல்மான் கானுடன் படம் எடுக்கும் கமிட்மெண்ட் இருந்ததனால் அந்த வாய்ப்பை தவறவிட்டதாகவும் கூறியிருக்கிறார். ஆகையினால் மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்குவதாக தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சிறுத்தை சிவா, பிரசாந்த் நீல் ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் விஷ்ணு வரதன், அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.