தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் நடிகர் சங்கர். இவரது இளைய மகள் அதிதி சங்கர் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடிப்பில் பெயர் பெற்றவர். இவ்வாறு நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக வலம் வந்தாலும் பாடல் பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும் திறமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக இவர் அர்ஜுன் தாஸுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதே சமயம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நேசிப்பாயா எனும் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் அதிதி சங்கர். இந்நிலையில் இவர் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அதிதி சங்கர் தெலுங்கில் நடிக்க உள்ள புதிய படத்தில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் கதாநாயகியாக நடிக்கிறாராம். இதனை விஜய் கனகமெடலா இயக்குவதாகவும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஐதராபாத் பகுதியில் தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.