Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டா சார் அப்படியே எங்க குடும்பத்தையும் பாத்தீங்கனா… நேரடியாக சீண்டிய தயாரிப்பாளர்!

விஜய் தேவரகொண்டா சார் அப்படியே எங்க குடும்பத்தையும் பாத்தீங்கனா… நேரடியாக சீண்டிய தயாரிப்பாளர்!

-

உங்களால எங்களுக்கு 8 கோடி நஷ்டம் என்று விஜய் தேவரகொண்டாவை பிரபல தயாரிப்பு நிறுவனம் சாடியுள்னனர். 

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் ‘குஷி‘ திரைப்படம் வெளியாகி உள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

விஜய் தேவரகொண்டாவின் சினிமா கேரியரில் குஷி படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில்  குஷி படத்தில் தனக்கு கிடைத்த வருமானத்தில் ஒரு கோடியை தேர்ந்தெடுக்கப்படும் 100 குடும்பங்களுக்கு பிரித்து கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“குஷி படத்தின் எனது சம்பளத்தில் இருந்து 1 கோடி ரூபாயை உங்கள் குடும்பங்களுக்குக்கு பரிசளிக்க இருக்கிறேன். விரைவில், 100 குடும்பங்களை தேர்வு செய்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்குவேன்.” என்று தெரிவித்தார். 

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘வேர்ல்டு பேமஸ் லவர்’ படத்தை வெளியிட்ட நிறுவனம் அவரை சாடி பதிவிட்டுள்ளனர். 

“அன்புள்ள விஜய் தேவரகொண்டா, நீங்கள் நடித்த ‘வேர்ல்டு ஃபேமஸ் லவர்’ படத்தை விநியோகம் செய்ததால் எங்களுக்கு ரூ.8 கோடி நஷ்டம். ஆனால் அதுபற்றி யாரும் பேசவில்லை. இப்போது நீங்கள் உங்களது பெரிய மனதால் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்குகிறீர்கள். எங்களது வெளியீட்டாளர்கள் மற்றும் விநியோகதஸ்கர்களின் குடும்பங்களையும் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார். 

நீங்கள் வெளியிடும் படத்தில் லாபம் கிடைத்தால் நடிகர்களுக்கு கொடுப்பீர்களா, அப்படி இருக்கையில் நஷ்டம் வந்தால் மட்டும் ஏன் நடிகர்கள் மீது பாய்கிறீர்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ