இயக்குனர் வெங்கட் பிரபு கடைசியாக நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் The Greatest Of All Time படத்தை இயக்கி வருகிறார். ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் டைம் டிராவல் சம்பந்தமான கதை களத்தில் உருவாகி வருவதாகவும், இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில தினங்களுக்கு முன் தொடங்கி ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது.
இந்நிலையில் The Greatest Of All Time படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் கனிகா, இப்படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. இதனை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெங்கட் பிரபுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ” உடன் பணியாற்றுவதற்கு மிகச் சிறந்த நபர்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த படத்தில் லைலா, சினேகா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ், பிரேம்ஜி என ஒரு ரசிகர் பட்டாளத்தையே நடிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு.