Homeசெய்திகள்சினிமாபிரபல தமிழ் பட இயக்குனர் கைது!

பிரபல தமிழ் பட இயக்குனர் கைது!

-

- Advertisement -

பிரபல தமிழ் பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.பிரபல தமிழ் பட இயக்குனர் கைது!

இயக்குனர் மோகன் ஜி கடந்த 2016 ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருடைய படங்கள் பெரும்பாலும் வன்னியர் சாதி மக்களை மையமாக வைத்து தான் உருவாக்கப்படும். இவர் பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு பிறகு திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இவர் இயக்கியிருக்கும் படங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக பலராலும் விமர்சிக்கப்பட்டிருந்தார். அடுத்ததாக மோகன் ஜி தனது எக்ஸ் தள பக்கத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல தமிழ் பட இயக்குனர் கைது!அதாவது மோகன் ஜி வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலப்பதாக கூறியதாகவும் இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் அவர் என்ன வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தொடர்பான முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

MUST READ