பிரபல இயக்குனர் நெல்சன் திலிப் குமார் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து டாக்டர் திரைப்படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். அடுத்ததாக இவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. எனவே தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என முயற்சி செய்து ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி இமாலய வெற்றி பெற்றார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நெல்சன், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான முழு முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் நெல்சன். அதே சமயம் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு ஹுக்கும் என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு (2025) முதல் பாதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக நெல்சன் பக்காவா ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறாராம். அதன்படி தெலுங்கு சினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் இணைய இருக்கிறார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
ஏற்கனவே ஜெயிலர் முதல் பாகத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்த நிலையில் படமானது பான் இந்தியா அளவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.