Homeசெய்திகள்சினிமாஇனிமே இப்படித்தான் .... லோகேஷின் அதிரடி முடிவால் அப்செட்டில் ரசிகர்கள்

இனிமே இப்படித்தான் …. லோகேஷின் அதிரடி முடிவால் அப்செட்டில் ரசிகர்கள்

-

இனிமே இப்படித்தான் .... லோகேஷின் அதிரடி முடிவால் அப்செட்டில் ரசிகர்கள்இளம் தலைமுறை இயக்குனர்களில் முன்னிலை இயக்குனராக விளங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து இமாலய வெற்றியை பதிவு செய்து வருகிறார் லோகேஷ். இவருடைய படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றாலும் அதில் ஏதோ ஒரு சில விஷயங்கள் ரசிகர்களை திருப்தி படுத்த தவறி விடுவதாக லோகேஷ் சில பேட்டிகளில் கூறியுள்ளார். குறிப்பாக மாஸ்டர், விக்ரம், லியோ படங்களில் இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியில் சில தொய்வான காட்சிகள் இடம் பெற்றிருந்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அதை பாசிட்டிவாக ஏற்றுக் கொண்ட லோகேஷ் கனகராஜ் அடுத்து வரும் படங்களில் இதனை கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த தொய்வுகளுக்கு காரணமாக அவர் கூறியிருப்பதாவது பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு ரிலீஸ் டேட் முடிவு செய்யப்பட்டு விடுவதால் அந்த தேதிக்குள் படத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற அவசரத்தில் சில சமரசங்கள் படத்தில் செய்யப்பட்டு விடுகின்றன. இதற்கு முன்னால் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த ஒவ்வொரு படத்திற்கும் இதுதான் நிலைமை. எனவே படத்தை பக்காவாக எந்தவித அழுத்தமும் இன்றி முடிப்பதற்கு கொஞ்சம் காலம் தேவைப்படும். இனிமேல் வேகத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் லோகேஷ் கூறியுள்ளார்.

இந்நிலையில், தான் இயக்கப் போகும் எந்த ஒரு படத்திற்கும் ரிலீஸ் தேதியை முன்னரே அறிவிக்க வேண்டாம் என்ற முடிவை அவர் எடுத்துள்ளார். லோகேஷ் எடுக்கும் படங்களின் படப்பிடிப்பு முடியும் தருவாயிலேயே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இச்செய்தி அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தெரிந்தபின் ரசிகர்கள் அப்படத்திற்காக வெறித்தனமாக காத்திருப்பார்கள்.
ஆனால் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் தலைவர் 171, கைதி 2, விக்ரம் 2, லியோ 2 போன்ற படங்களின் ரிலீஸ் தேதி எதுவுமே முன்னதாகவே அறிவிக்கப்படாது. லோகேஷின் இந்த திடீர் முடிவால் எந்த தேதியில் படம் ரிலீஸ் ஆகும் என்பதே தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல ஆகிவிடுமே என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ