Homeசெய்திகள்சினிமா'V சென்டிமென்ட்'-ஐ விடாத அஜித்... அதிருப்தியில் ரசிகர்கள்!

‘V சென்டிமென்ட்’-ஐ விடாத அஜித்… அதிருப்தியில் ரசிகர்கள்!

-

அஜித் நடிப்பில் தற்போது உருவாகவிருக்கும் புதிய படத்திற்கும் ‘V சென்டிமென்ட்’ அவர் பின்பற்றி உள்ளார்.

நடிகர் அஜித் ‘V சென்டிமென்ட்’-ஐ மிகவும் தீவிரமாக பின்பற்றி வருவதாகத் தெரிகிறது. வீரம் படத்தில் ஆரம்பித்த ‘V சென்டிமென்ட்’ தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சிறுத்தை சிவா உடன் மூன்று படங்கள் நடித்த அஜித் அந்த மூன்று படங்களுக்கும் V  என்ற தொடங்குமாறு தான் டைட்டில் இருக்க வேண்டும் என்று வேதாளம், விவேகம், விஸ்வரூபம் என்று தலைப்பு வைத்தனர்.

நேர்கொண்ட பார்வை படத்தில் தான் இந்த ‘V சென்டிமென்ட்’ பின்பற்றப்படவில்லை. அதையடுத்து எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த அடுத்த படத்திற்கும் ‘V’ சென்டிமென்ட் பின்பற்றி ‘வலிமை’ என்று தலைப்பு வைத்தனர்.

இந்நிலையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கும் இதை பின்பற்றியுள்ளனர். படத்திற்கு ‘விடா முயற்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அஜித் இந்த ‘V சென்டிமென்ட்’-ஐ தீவிரமாகப் பின்பற்றி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ரசிகர்கள் தரப்பில் இன்னும் நல்ல தலைப்பு  வைத்திருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ