Homeசெய்திகள்சினிமாரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்.... இந்த மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அப்டேட்டுகள்!

ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்…. இந்த மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அப்டேட்டுகள்!

-

- Advertisement -

இந்த மாதத்தில் முக்கிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

குட் பேட் அக்லிரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்.... இந்த மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அப்டேட்டுகள்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் இந்த படத்தில் முதல் பாடல் விரைவில், அதாவது இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. மேலும் ஏற்கனவே இந்த படத்தின் டீசரை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமாக கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் 2025 ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்.... இந்த மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அப்டேட்டுகள்! இந்நிலையில் வருகின்ற மார்ச் 14 லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட திட்டமிட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

ரெட்ரோ

சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ரெட்ரோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் 2025 மே 1ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்.... இந்த மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அப்டேட்டுகள்! இதற்கிடையில் ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் டீசரும், முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்தது இந்த படத்தின் இரண்டாவது பாடல் இந்த மாதத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதன்படி இப்பாடலானது நடிகை ஸ்ரேயா நடனமாடியுள்ள ஸ்பெஷல் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீர தீர சூரன் பாகம் 2

சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. விக்ரமின் 62வது படமான இந்த படத்தில் துஷாரா, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். ரசிகர்களே கொண்டாட தயாராகுங்கள்.... இந்த மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அப்டேட்டுகள்!வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற மார்ச் 20 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருக்கிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அடுத்தடுத்த முக்கிய அப்டேட்டுகள் இந்த மாதத்தில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

MUST READ