Homeசெய்திகள்சினிமாஆட்டுமந்தைகளாக நடத்தப்படும் ரசிகர்கள்..... நடிகர் அஜித்துக்கு சல்யூட்!

ஆட்டுமந்தைகளாக நடத்தப்படும் ரசிகர்கள்….. நடிகர் அஜித்துக்கு சல்யூட்!

-

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் நடிகர் அஜித்தை தனித்துவமானவர் என்று சொல்லலாம். ஏனென்றால் அவர் தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவர். ஆட்டுமந்தைகளாக நடத்தப்படும் ரசிகர்கள்..... நடிகர் அஜித்துக்கு சல்யூட்!ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் பைக், கார் ரேஸிங் போன்றவற்றிலும் திறமையானவர். இவர் மற்ற நடிகர்களைப் போல் ரசிகர்களை சுரண்டி பிழைப்பது இல்லை. அவர்களிடமிருந்து எந்த லாபத்தையும் எதிர்பார்ப்பதில்லை. சுயமாகவே தனது சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்றும் தன்னால் யாரும் பாதிப்படைய கூடாது என்று எண்ணும் நற்குணம் படைத்தவர் அஜித். அதேபோல் தன்னுடைய ரசிகர்கள் தவறான வழியில் செல்வதையும் விரும்பாதவர். அதன்படி இவர் ஏற்கனவே ரசிகர்கள் இவருக்காக உருவாக்கி வைத்திருந்த ரசிகர்கள் மன்றத்தையே கலைக்க சொன்னவர். இவருடைய இந்த செயல் மற்ற தமிழ் நடிகர்களுக்கு முன்னுதாரணம். மேலும் அஜித்துக்கு தன்னை தல என்று சொல்வதையே ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படி இருக்கும் சூழலில் ரசிகர்கள் பலரும் இவரை கடவுளே அஜித்தே என்பதை எப்படி ஏற்றுக்கொள்வார்?

திரைத்துறையில் அன்று முதல் இன்று வரை எந்த ஒரு நடிகரும் பொதுமக்களின் ஆதரவில்லாமல் ஸ்டார் அந்தஸ்தை அடைவதில்லை. இதற்கு நடிகர்களின் திறமையும் கடின உழைப்பும் ஒரு காரணமாக இருந்தாலும் ஒரு நடிகனின் வளர்ச்சிக்கு ரசிகர்களும் மிகப்பெரிய காரணம் என்று சொல்லலாம். ஆனால் நடிகர்கள் பலர் கேமராவிற்கு முன் ஒரு வாழ்க்கையும் கேமராவிற்கு பின் ஒரு வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றனர். எனவே அத்தகைய நடிகர்களை பின்பற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்வில் எதை சாதிக்க போகிறார்கள்? சினிமாவினால் ரசிகர்கள் பலவற்றையும் இழக்கிறார்கள். அதாவது புத்தகங்களை படிப்பது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, சிந்தனை, உடற்பயிற்சி போன்ற அனைத்தும் சினிமா வந்த பிறகு காணாமல் போய்விட்டது. ஆட்டுமந்தைகளாக நடத்தப்படும் ரசிகர்கள்..... நடிகர் அஜித்துக்கு சல்யூட்!ரசிகர்கள், சினிமாவின் வாயிலாக என்ன கற்றுக் கொள்கிறார்கள்? கற்பழிப்பு, கொலை, வன்முறை ஆகியவற்றை தான் கற்றுக் கொள்கிறார்கள். அதேசமயம் ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆகும் போது ஒரு பிராணியை கொன்று அதன் ரத்தத்தில் அபிஷேகம் செய்வது போன்ற மிகக் கொடுமையான விஷயங்களை செய்கின்றனர். இது தவிர வேறு எந்த பயனுள்ள செயலையும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் செய்வதில்லை. சின்ன குழந்தைகளும் கூட ஒரு பெரிய நடிகரின் படத்தில் இடம்பெறும் வெட்டுக்குத்து, கொலை போன்ற காட்சிகளை பார்த்து விட்டு விளையாட்டிலும் கூட அதைப் பின்பற்றுகிறார்கள். இது போன்ற விஷயங்கள் தான் இன்றைய கால அவலத்தின் உச்சம். இருப்பினும் சினிமாவின் மூலம் நடிகர்கள் எவ்வளவுதான் பாசிட்டிவான விஷயங்களை சொன்னாலும் ரசிகர்கள் யாரும் அதைப் பின்பற்றாமல் சினிமாவில் உள்ள நெகட்டிவ்வான விஷயங்களை மட்டும் கற்றுக்கொண்டு தந்திரமாக செயல்பட்டு வருகின்றனர்.ஆட்டுமந்தைகளாக நடத்தப்படும் ரசிகர்கள்..... நடிகர் அஜித்துக்கு சல்யூட்! மேலும் சில நடிகர்கள், ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினாலும் சமீப காலமாக வெளியாகும் தகவல்கள் பல நடிகர்களைப் பின்பற்றும் ரசிகர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது. சினிமாவிற்கும் நடிகர்களுக்கும் பொதுமக்கள் கொடுக்கின்ற முக்கியத்துவத்தினை அவரவர் குடும்பத்தினருக்கு கொடுத்தால் பல பயன் இருக்கிறது. ஆனால் அன்று முதல் இன்று வரை நடிகர்களுக்கு, ரசிகர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைக்க முடியாமல் அவர்கள் ஆட்டு மந்தைகளாகவே இருக்கிறார்கள். அதன்படி அஜித் ரசிகர்கள் பலர் கல்லூரிகளிலும் கூட ‘கடவுளே அஜித்தே’ என்று கோஷமிடுவது போன்ற வெட்டி வேலைகளை பார்த்து வருகின்றனர். இது அஜித்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடுதான் என்றாலும் அதனால் என்ன பயன்? என்பதை பற்றி அவர்கள் ஒரு நொடி கூட யோசிப்பதில்லை. ஆட்டுமந்தைகளாக நடத்தப்படும் ரசிகர்கள்..... நடிகர் அஜித்துக்கு சல்யூட்!ஆனால் நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என்று போகாமல் அவர்களை நல்வழியில் நடத்தும் வகையில் நேற்று (டிசம்பர் 10) அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதாவது பொது இடங்களில் மற்றவர்களை புண்படுத்தும் விதமாக ரசிகர்கள் இவ்வாறு ‘கடவுளே அஜித்தே’ என்று கோஷம் எழுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற கோஷமிடுவதில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் தன்னுடைய பெயரை வைத்து அழைப்பது தான் தன்னுடைய விருப்பம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அஜித். எனவே ரசிகர்களின் இந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அஜித்தின் இந்த முடிவுக்கு சல்யூட்.

MUST READ