100 கிலோ பளு தூக்கி அசத்தல்…. ராஷ்மிகாவின் பீஸ்ட் மோடு…
தென்னிந்திய திரையுலகம் மட்டுமன்றி இந்திய திரையுலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். இறுதியாக அவரது நடிப்பில் அனிமல் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது தி கேர்ள் பிரண்ட், ரெயின்போ, புஷ்பா இரண்டாம் பாகம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது தவிர, அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தி கேர்ள் பிரண்ட், ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா 100 கிலோ பளு தூக்கிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வரும் அவர், படப்பிடிப்புக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், குபேரா படப்பிடிப்பு தளத்தில் 100 கிலோ எடையைத் தூக்கிய படத்தை வெளியிட்டு, தான் ஒரு பீஸ்ட் போல உணர்வதாக தெரிவித்துள்ளார்