ஃபைட்டர் திரைப்படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமாவில் சமீபத்தில் வெளியான பல படங்கள் தோல்வி பாதையில் பயணித்த நேரத்தில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் ஆயிரம் கோடியை வசூல் சாதனை செய்து இமாலய வெற்றியை தொட்டது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மிரட்டி இருந்தார். இப்படத்தில் ஹாலிவுட் படங்களுக்கு இணையான சண்டை காட்சிகள் அமைந்திருந்தன.மேலும் சல்மான் கான் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். சல்மான் கானின் ஏக் தா டைகர் மற்றும் பதான் திரைப்படங்களின் கதைகளை இணைத்து புதிய ஸ்பை யூனிவர்சை சித்தார்த் ஆனந்த் அறிமுகப்படுத்தினார். இப்படத்தின் தொடர்ச்சியாகவே பல ஸ்பை திரில்லர் படங்கள் தயாராக உள்ளன. ஹிரித்திக் ரோஷனின் முந்தைய படமான விக்ரம் வேதா படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. இது தமிழ் படமான விக்ரம் வேதாவின் ஹிந்தி ரீமேக் ஆகும்.
தற்போது மீண்டும் சித்தார்த் ஆனந்த் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் இணைந்து ஃபைட்டர் படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தில் தீபிகா படுகோன், அனில்கபூர், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் சேகர் படத்திற்கு இசை அமைத்துள்ளார். 250 கோடி ரூபாய்க்கும் அதிமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஃபைட்டர் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ஃபைட்டர் படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.