Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த திரைப்பட பிரபலங்கள்!

விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த திரைப்பட பிரபலங்கள்!

-

- Advertisement -

விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த திரைப்பட பிரபலங்கள்!நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தேமுதிக நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். தற்போது விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மறைவு ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களும் தொண்டர்களும் கேப்டன் கேப்டன் என்று கதறி அழுகின்றனர். கண்ணீருடன் விஜயகாந்த் இல்லத்தின் முன்பு ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.  முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். விஜயகாந்தின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடி விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த திரைப்பட பிரபலங்கள்!அந்த வகையில் நடிகர் தியாகராஜன் நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டெடுத்தவர் என்று விஜயகாந்த்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் நடிகை ரோகினி, ‘விஜயகாந்த் நல்ல மனிதர், நடிகர் சங்கத்திற்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார். அவரின் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். அவர்களைத் தொடர்ந்து வையாபுரி, விக்ரம், தியாகு, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ