Homeசெய்திகள்சினிமா'கூலி' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து!

‘கூலி’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து!

-

- Advertisement -

கூலி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.'கூலி' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து!

ரஜினி நடிப்பில் தற்போது வேட்டையன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை டிஜே ஞானவேல் இயக்கியுள்ள நிலையில் வருகின்ற அக்டோபர் 10-ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினி நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிக்கிறார். மேலும் இவருடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மல்டி ஸ்டாரர் படமாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. 'கூலி' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து!அதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அருகில் இருக்கும் கண்டெய்னர் முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் படக்குழுவினர் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.

MUST READ