நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் கிட்டத்தட்ட 25 படங்கள் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருடைய 25 ஆவது படமான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. அதைத்தொடர்ந்து தனது 26வது படத்தினை சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கிறார்
கார்த்தி. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்திற்கு வா வாத்தியாரே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது.
Let’s Celebrate our exceptional star @Karthi_Offl’s Birthday with #Karthi26 🎉
First Look Today at 5 PM 🔥#HBDKarthi #NalanKumarasamy #StudioGreen @GnanavelrajaKe @NehaGnanavel @Dhananjayang @agrajaofficial @proyuvraaj @digitallynow pic.twitter.com/asIFxHS0Ca
— Studio Green (@StudioGreen2) May 25, 2024
இந்நிலையில் கார்த்தியின் 47வது பிறந்தநாள் ஸ்பெஷலாக கார்த்தி 26 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே கார்த்தியின் 27ஆவது படமான மெய்யழகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.