Homeசெய்திகள்சினிமாசித்தார்த் நடிக்கும் மிஸ் யூ... வெளியானது முதல் தோற்றம்...

சித்தார்த் நடிக்கும் மிஸ் யூ… வெளியானது முதல் தோற்றம்…

-

தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் இளம் நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சித்தா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கோலிவுட்டின் பெரும் நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தை பெரிதும் பாராட்டினர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி அவர் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதற்கிடையே, தமிழ் சினிமாவில் சைக்கோ, காற்று வௌியிடை, ஹே சினாமிகா ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்திருந்த அதிதி ராவை காதலித்தும் வருகிறார். அண்மையில் இருவரின் திருமண நிச்சயமும் முடிந்தது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு காதல் திரைப்படத்தில் சித்தார்த் நடித்து வருகிறார். இப்படத்திற்கு மிஸ் யூ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்டு என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. களத்தில் சந்திப்போம் படத்தை இயக்கி ராஜசேகரன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக அஸ்திகா ரங்கநாத் நடிக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

MUST READ