கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா… முதல் தோற்றம் வைரல்…
- Advertisement -
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கவுண்டமணி கோலிவுட் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். இவரும், செந்திலும் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகளுக்கு இன்று வரை ஈடு இல்லை. திரை உலகில் 400 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 10 படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவரது டைமிங் காமெடிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகள் மனம் கவர்ந்தவையாக இருக்கும்.
இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஒத்த ஓட்டு முத்தையா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கவுண்டமணியுடன் இணைந்து ராஜேஸ்வரி, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம்புலி, வையாபுரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நகைச்சுவை மிக்க அரசியல் கதை அம்சத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. நடிகரும், இயக்குநருமான சாய் ராஜகோபால் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். சசி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.