ஹிட்லர் படத்திலிருந்து முதல் பாடல் ரிலீஸ்
வை என்றால் அது விஜய் ஆண்டனியில் இசையில் தான் தொடங்கியது எனலாம். காதல், மெலோடி, அதிரடி, குத்து என அனைத்து தரப்பு இசைகளும் இவருக்கு அத்துப்பிடி. அவரது இசையில் 2000 ஆரம்பத்தில் வௌியான அனைத்து பாடல்களும் படுஹிட். அவரது இசையில் வெளியாகும் குத்துப் பாடல்கள் அனைத்து பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. இசையமைப்பாளராக கோலிவுட்டை வலம் வந்த விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகினார். தனது எதார்த்தமான நடிப்பில் மூலம் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார்.
இப்படத்தின் வெற்றி விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கொடுக்கத் தொடங்கின. அவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவரது திரை பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இறுதியாக வெளியான ரத்தம் திரைப்படமும் ஹிட் தான். இதனிடேய அவரது மூத்த மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் திரை உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இருப்பினும் தொடர்ந்து நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி.
அவரது நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ஹிட்லர். செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படைவீரன், வானம் கொட்டட்டும், ஆகிய படங்களை இயக்கிய தனா இயக்கி உள்ளார். இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிடோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அனிருத் இப்பாடலை வெளியிட்டு உள்ளார்.