Homeசெய்திகள்சினிமாபேமிலி ஸ்டார் படத்தின் முதல் பாடல் அப்டேட் இதோ...

பேமிலி ஸ்டார் படத்தின் முதல் பாடல் அப்டேட் இதோ…

-

- Advertisement -
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

இந்திய திரையுலகில் தனக்கென தனி ரசிகைகள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா. டோலிவுட்டில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான அவர், பெல்லி சோப்புலு என்ற படத்தின் வழியே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இத்திரைப்படத்தை தொடர்ந்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்ததோடு மட்டுமன்றி, தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் பெரிய வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் ரீமேக்கும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான டாக்ஸி வாலா, வோர்ல்டு பேமஸ் லவ்வர், ஜாதி ரத்னலு, லிகர் ஆகிய திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. இறுதியாக விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான குஷி படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் பேமிலி ஸ்டார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார்.

‘கீதா கோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராம் பெட்லா இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த புதிய படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல், நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ