Homeசெய்திகள்சினிமாD50 ஐ தொடர்ந்து தனுஷ் இயக்கும் புதிய படம் ..... அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!

D50 ஐ தொடர்ந்து தனுஷ் இயக்கும் புதிய படம் ….. அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!

-

- Advertisement -

D50 ஐ தொடர்ந்து தனுஷ் இயக்கும் புதிய படம் .....லேட்டஸ்ட் அப்டேட்!தனுஷ் தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர். கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இந்நிலையில் தனுஷ் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். ஏற்கனவே ப. பாண்டி திரைப்படத்தை இயக்கி பெயர் பெற்றார். D50 படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து தேரே இஸ்க் மெயின், D51 போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார்.D50 ஐ தொடர்ந்து தனுஷ் இயக்கும் புதிய படம் .....லேட்டஸ்ட் அப்டேட்!

இந்நிலையில் தனுஷ் D50 படத்தை அடுத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமான தகவலை பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது தனுஷ் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கப் போவதாகவும், ஜிவி பிரகாஷின் உறவினர் ஒருவர் அதில் முக்கிய ரோலில் நடிக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனுஷ் அதில் கேமியோ தோட்டத்திலும் நடிக்க இருப்பதாகவும் புதிய அப்டேட்களை கொடுத்திருக்கிறார். எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ