Homeசெய்திகள்சினிமாமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு.... கமல், விஜய் இரங்கல்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு…. கமல், விஜய் இரங்கல்!

-

- Advertisement -

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) மறைவிற்கு கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு.... கமல், விஜய் இரங்கல்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 1991 முதல் 1996 வரை பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சியில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து இவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியில் இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தவர். இவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படாமல் மிகவும் திறமையாக நிர்வாகம் செய்தார். இந்நிலையில் தான் இவருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான நோய் இருந்த காரணத்தால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் கடந்த சில தினங்களாகவே மூச்சு திணறல் காரணமாக டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அதே சமயம் நடிகரும் அரசியல்வாதிமான கமல்ஹாசன், “இந்தியா தனது தலைசிறந்த அரசியல்வாதி மற்றும் அறிஞர்களில் ஒருவரை இழந்துவிட்டது. டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது. அமைதியான கண்ணியமிக்க மன்மோகன் சிங், தொலைநோக்கு பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் மூலம் நம் தேசத்தை மறுவடிவமைத்தார். அவரது பாரம்பரியம் இந்திய வரலாற்றில் நிலைத்திருக்கும். தேசத்தின் போக்கை அமைதியாக ஆழமாக மாற்றிய ஒரு தலைவராக என்றென்றும் அவர் நினைவுகூரப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் தேசத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த துயரத்தை தருகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியாவை சிறப்பான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழி நடத்தினார். அவர் குறைவாக பேசினாலும் அதிகமாக சாதித்தார். இந்திய பொருளாதாரத்திற்காகவும் நாட்டுக்காகவும் அவர் செய்தவை காலத்திற்கும் போற்றப்படும். இந்த இக்கட்டான நேரத்தில் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், அன்புக்குரியவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ