Homeசெய்திகள்சினிமா2025 கோடையில் வெளியாகும் நான்கு பெரிய ஹீரோக்களின் படங்கள்!

2025 கோடையில் வெளியாகும் நான்கு பெரிய ஹீரோக்களின் படங்கள்!

-

- Advertisement -

2025 கோடை விடுமுறையில் வெளியாகும் நான்கு பெரிய ஹீரோக்களின் படங்கள்!

கூலி2025 கோடையில் வெளியாகும் நான்கு பெரிய ஹீரோக்களின் படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினி தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படம் 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தக் லைஃப்

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். 2025 கோடையில் வெளியாகும் நான்கு பெரிய ஹீரோக்களின் படங்கள்!இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் திரிஷா, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.

குட் பேட் அக்லி

அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படம் ஆரம்பத்தில் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 2025 கோடையில் வெளியாகும் நான்கு பெரிய ஹீரோக்களின் படங்கள்!பின்னர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் இந்த படம் 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என நம்பப்படுகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ

சூர்யாவின் 44 வது திரைப்படமாக உருவாகி வரும் படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார். 2025 கோடையில் வெளியாகும் நான்கு பெரிய ஹீரோக்களின் படங்கள்!இந்த படமானது கார்த்திக் சுப்பராஜ் ஸ்டைலில் காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியான நிலையில் இப்படம் 2025 கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ