இனிமேல்
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்தவர். அதைத் தொடர்ந்து தற்போது ஒரு நடிகராகவும் அறிமுகமாகி இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் மற்றும் சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த இவர் தற்போது இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் முதன்முறையாக ரொமான்டிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆல்பம் பாடலில் இவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இதனை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க கமல் தான் இந்த ஆல்பத்திற்கு பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் இனிமேல் எனும் முழு ஆல்பம் பாடல் வெளியாக உள்ளது.
ஜீனி
ஜெயம் ரவி நடிப்பில் அர்ஜுனன் இயக்கியுள்ள படம் தான் ஜீனி. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், கிரித்தி ஷெட்டி , வாமிகா கேபி உள்ளிட்டோ நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் இந்த படம் பேண்டஸி சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் ஜீனி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.
டியர்
ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் டியர் திரைப்படம் உருவாகியுள்ளது. குறட்டை சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் நாளை இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக இருக்கிறது. அதேசமயம் இன்று மாலை மஜா வெட்டிங் எனும் இரண்டாவது பாடலின் ப்ரோமோ வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது