Homeசெய்திகள்சினிமாஇன்று முதல் அவர் 'மிடில் கிளாஸ் மணிகண்டன்'.... 'குடும்பஸ்தன்' படம் குறித்து முதியவரின் விமர்சனம்!

இன்று முதல் அவர் ‘மிடில் கிளாஸ் மணிகண்டன்’…. ‘குடும்பஸ்தன்’ படம் குறித்து முதியவரின் விமர்சனம்!

-

- Advertisement -

ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இன்று முதல் அவர் 'மிடில் கிளாஸ் மணிகண்டன்'.... 'குடும்பஸ்தன்' படம் குறித்து முதியவரின் விமர்சனம்! அந்த வகையில் ஏற்கனவே இவர், குட் நைட் லவ்வர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் மணிகண்டன், அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிக்க வைஷாக் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மணிகண்டனுடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிடில் கிளாஸ் இளைஞன் ஒருவனின் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை சுவாரஸ்யமான காமெடியான திரைக்கதையின் மூலம் கொடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர். நேற்று (ஜனவரி 24) வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் மணிகண்டன் ரசிகர்களுடன் குடும்பஸ்தன் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த மணிகண்டனை இடைநிறுத்தி, முதியவர் ஒருவர் குடும்பஸ்தன் படம் குறித்து தனது விமர்சனத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார். இன்று முதல் அவர் 'மிடில் கிளாஸ் மணிகண்டன்'.... 'குடும்பஸ்தன்' படம் குறித்து முதியவரின் விமர்சனம்!அப்போது பேசிய அந்த முதியவர், “இன்று முதல் மிடில் கிளாஸ் மணிகண்டன் என்று தான் இவரை அழைக்க வேண்டும். குடும்பஸ்தன் படத்தில் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். ரொம்ப அழகாக நடித்து இருக்கிறார். அவங்க அம்மா சாப்பாடு தருகிற காட்சியில் கண்ணீரே வந்து விடுகிறது. மணிகண்டனுக்கு ஜெய் பீம், குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய நான்கு படங்களுமே வெற்றிதான். அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ