ஜி.வி. பிரகாஷ், இயக்குனர் செல்வராகவன் குறித்து பேசி உள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் தற்போது கிங்ஸ்டன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தினை ஜி.வி. பிரகாஷ் தானே இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஜேஷ் பாலச்சந்திரன், அழகம்பெருமாள், சேத்தன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கமல் பிரகாஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் 2025 மார்ச் 7 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான ப்ரமோஷன் பணிகள் போன்ற பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இவர், செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜி.வி. பிரகாஷ், செல்வராகவன் குறித்து பேசியுள்ளார்.
#GVPrakash in recent interview
– Definitely selvaraghavan album is so special.
– We done two film #MayakkamEnna & #AayirathilOruvan, 3rd time i’am joining with this legend, selvaraghavan also wrote one song.pic.twitter.com/5opCFIOE6n— Movie Tamil (@MovieTamil4) February 20, 2025
அதன்படி அவர் பேசியதாவது, ” செல்வராகவன் சாரின் ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும். நான் செல்வராகவனுடன் இணைந்து மயக்கம் என்ன மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரண்டு படங்களை பணியாற்றி இருக்கிறேன். இரண்டுமே நிச்சயம் என்னுடைய கேரியர் பெஸ்டாக அமைந்தது. அடுத்தது மூன்றாவது முறை அந்த லெஜண்ட் உடன் பணியாற்றுகிறேன். இந்த படத்தில் செல்வராகவன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்” என்று தெரிவித்திருக்கிறார்.