ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் இடி முழக்கம் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ், ஹீரோவாகவும் பல படங்களில்நடித்து வருகிறார். அந்த வகையில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் டியர், ரிபெல், கிங்ஸ்டன், கள்வன் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில் ஜிவி பிரகாஷ் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அமைத்துள்ளது. படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், எம் எஸ் பாஸ்கர், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. இதை தொடர்ந்து படத்தை விரைவில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
#AdiTheniSanthaiyil -First single from #Idimuzhakkam will be revealed by Makkal Selvan @VijaySethuOffl Tomorrow @ 5 PM. @NRRaghunanthan Musical
Produced by @Kalaimagan20 @mu_fathima @SkymanFilms @seenuramasamy @gvprakash @SonyMusicSouth. @Vairamuthu@SGayathrie @Actor_ArulDas pic.twitter.com/naU3gHAjDo— SKYMAN FILMS INTERNATIONAL (@SkymanFilms) February 23, 2024
அதே சமயம் இடிமுழக்கம் படத்தின் அடி தேனி சந்தையில் எனும் முதல் பாடல் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.