நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இவருடைய அர்ப்பணிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த அளவிற்கு ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் தனுஷ். ஏற்கனவே தனது அசுரத்தனமான நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்த தனுஷ் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதேசமயம் கடந்த 2017ல் பவர் பாண்டி திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் மாறினார். அதைத் தொடர்ந்து தனது ஐம்பதாவது படமான ராயன் படத்தையும் இயக்கி ஒரு இயக்குனராகவும் சாதித்துக் காட்டியுள்ளார். அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ். இவ்வாறு நடிகராகவும் இயக்குனராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் தனுஷ் நாளை (ஜூலை 28) தனது 41வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.
Happy bday macha 🔥🔥 @dhanushkraja … Director aavum saadhichaachu mass … looking forward for our next two albums in ur direction .NEEK and one more 🔥🔥🔥 let’s goooooooo 🔥
Happy to release @dhanushkraja‘s Birthday Common DP 🤗 wishing him all the best for his future… pic.twitter.com/VOqtHxJP8q
— G.V.Prakash Kumar (@gvprakash) July 27, 2024
இந்நிலையில் தனுஷின் நெருங்கிய நண்பரும் பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் முதல் ஆளாக தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சா. டைரக்டராகவும் சாதிச்சாச்சு. நம்முடைய அடுத்த இரண்டு ஆல்பங்களை உங்களுடைய இயக்கத்தில் எதிர்பார்க்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.